அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் செட்டிநாடு சிமெண்ட் கம்பெனியின் பின்புறம் உள்ள சிமெண்ட் ரோடு பகுதியில் நிறுத்தி வைத்திருந்த பல்கர் லாரி காணாமல் போனதாக வாகன ஓட்டுனர் நாட்டார்மங்கலம் பாலுசாமி மகன் ராஜேஷ் (38) என்பவர் அளித்த புகாரின் பேரில் கீழப்பலூர் காவல் உதவி ஆய்வாளர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்தார் . இதனைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் மலர்கொடி இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில் பல்கர் லாரி ஒன்று மீன்சுருட்டி கொல்லாபுரம் இலுப்பைத் தோப்பில் இருப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்று சோதனை செய்ததில் திருடுபோன லாரி என்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில் 18/06/2020 தேதி அன்று கீழப்பழூவூர் பொறுப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றிய ராஜா கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்குரிய ஒரு நபரை பிடித்து விசாரணை செய்ததில் தான் பல்கர் வாகனத்தை திருடியதாக ஒப்புக் கொண்டார். இதனையடுத்து குற்றவாளியான கடலூர் மாவட்டம் வல்லம்துறை மகாலிங்கம் மகன் பொடிசான் என்கின்ற ராஜசேகர் (43) என்பவர் இத் திருட்டு சம்மந்தமாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் திருப்பனந்தாள், மணல்மேடு, அண்ணாமலை நகர், சிதம்பரம் போன்ற இடங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததை அறிந்த அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமேனி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார் . இதனை ஏற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் மாவட்ட ஆட்சியர் ரத்னா மேற்பரிந்துரை செய்த நிலையில், பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பொடிசான் என்ற ராஜசேகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் 02/07/2020 அன்று அடைக்குமாறு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினரால் ராஜசேகர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.