
பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது அந்த குடியிருப்பில் குடியிருந்து அங்கு பணியாற்றி வருகின்ற தலைமைச் செவிலியர் திரு மணிமொழி என்பவர் இரவு நேரப் பணியில் இருந்துள்ளார் இதனை அறிந்துகொண்ட மர்ம நபர்கள் மணிமொழியின் வீட்டின் பூட்டையும் கதவையும் உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலுள்ள பொருள்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு .குடியிருப்புக்கு அருகில் உள்ள கோயிலின் சூலாயுதத்தை பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த தென்கரை காவல்துறை சார்பு ஆய்வாளர் திரு அசோக் அவர்கள் என்னென்ன கொள்ளை யடிக்கப்பட்டது என்பதை விசாரணை செய்து வருகின்றார்கள் .
பெரியகுளம் செய்திகளுக்காக எஸ்.கார்த்திகேயன்