
தாமரைகுளத்தில் நடைபெற்ற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழாவில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் மரக்கன்றுகளை நட்டார்
அரியலூர் மாவட்டம் தாமரைக் குளம் கிராமத்தில் சுகாதார துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் .. இக்கட்டிடத்தினை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் D. ரத்னா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து சுகாதார நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் மரக்கன்றுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் சந்திரசேகர், துனை இயக்குநர் சுகாதாரப் பணி ஹேமசந்த் காந்தி , கோட்டாச்சியர் பாலாஜி , ஒன்றிய குழு சேர்மன் செந்தமிழ்செல்வி , துணை சேர் மென் சரஸ்வதி , ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், சமூகஆர்வலர்கள், பொதுமக்கள் பெருமளவில் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.