சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஐஐடி விடுதியில் தங்கியுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள காவல் ஆளிநர்களை காணொளி மூலமும் மற்றும் சமூக இடைவெளியுடன் நேரில் சந்தித்தும் குறைகளை கேட்டறிந்தார் .
03.07.2020 அன்று மாலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மகாநதி தங்கும் விடுதியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களை சந்திக்க நேரில் சென்று, அவர்களுடன் காணொளி காட்சி மூலமும் மற்றும் சமூக இடைவெளியுடன் நேரடியாக உரையாடி நலம் விசாரித்து அவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களை தனிமைப்படுத்துவதற்கு தாமிரபரணி விடுதியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார்கள்.
உடன் கூடுதல் ஆணையாளர் தெற்கு திரு.ஆர்.தினகரன், இ.கா.ப., கிழக்கு மண்டல காவல் இணை ஆணையாளர் திரு.ஆர்,சுதாகர், இ.கா.ப., அவர்கள் மற்றும் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் திரு.ராஜேந்திரன், (பொறுப்பு மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர்) ஆகியோர் இருந்தனர்.


