தர்மபுரியில் சிறைக்கைதி தப்பி ஓட்டம்.. 16 மணிநேரத்தில் கைதியை பிடித்து தர்மபுரி நகர போலிசார் தீவிர விசாரணை.

938

தர்மபுரியில் சிறைக்கைதி தப்பி ஓட்டம் .16 மணிநேரத்தில் கைதியை பிடித்து தர்மபுரி நகர போலிசார் தீவிர விசாரணை.

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்த வினோத் என்ற நபர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தந்தை மகனிடையே ஏற்பட்ட தகராரில் தந்தையை கடுமையாக தாக்கிவிட்டு தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்துள்ளார்.உடனே அவரை கம்பைநல்லூர் காவல்நிலைய போலிசாரிடம் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைடுத்து தர்மபுரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை தர்மபுரி எஸ்வி ரோடில் உள்ள கிளைச்சிறையில் இருந்து வினோத் தப்பியோடிவிட்டார்.நேற்று இரவு கிளைச்சிறை காவலர்கள் தணிக்கை செய்த பொழுது வினோத் காணாமல்போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக தர்மபுரி நகர காவல்நிலையத்தில் புகார்அளித்ததை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ரத்தனகுமார் தலைமையிலான காவல்துறையினர் விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இன்று காலை சோகத்தூர் மதுபான கடைஅருகே கண்டுபிடித்து தர்மபுரி நகர காவல் நிலையத்தில் வைத்து போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில் குற்றவாளி சிறையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 16 மணிநேரத்தில் குற்றவாளியை மீண்டும் பிடித்த நகர காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here