
மாவட்ட காவல்துறை மற்றும் சோலைவனஅமைப்பினர் இணைந்து மரங்களை அழிவில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சி : மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் பங்கேற்பு.
அரியலூர் மாவட்டத்தில் பசுமையைமீட்டெடுக்கும் முயற்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன், சோலைவனம் அமைப்பினர் இணைந்து காவல்துறை அலுவலகங்கள்,
காவலர் பயிற்சி மைதானம், காவலர்கள் குடியிருப்பு மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இதுவரை 3500- கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர் . மேலும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அதீத முயற்சியால் இரண்டு மரங்கள் மாவட்ட காவல் துறை அலுவலக வளாகத்தின் பின் புறத்தில் மறு நடவு செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்தகட்ட முயற்சியாக மரங்களை அழிவில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக காவல்துறையினர் மற்றும் சோலைவனம் அமைப்பினர் இணைந்து மாவட்ட விளையாட்டு அரங்கத்தை சுற்றியுள்ள மரங்களின் மீதுள்ள விளம்பர பலகைகளின் மீது அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் தலைமையில், ஆணிகளை அகற்றி (பிடிங்கி) அதன் வளர்ச்சியை ஊக்குவித்து பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் . இதில் உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இம்முயிற்சியை காவல்துறையினர் மாவட்ட முழுவதும் பின் பற்றி பசுமை நலன் காக்க வேண்டும் .மரங்களில் பொதுமக்கள் ஆணியடித்து இரும்பு கம்பிகளை கொண்டு கட்டுவதையும் அதன் முறையான வளர்ச்சியை தடுக்கும் விதத்தில் செயல்படுவதையும் பொதுமக்கள் தவிர்த்து மரங்கள் நன்கு வளர்வதற்கு உண்டான சூழ்நிலை அமைத்து பசுமையை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்கிறேன் என கூறினார் . இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன்,சோலைவனஅமைப்பை சேர்ந்த இளவரசன், கௌசிக் மற்றும் ஜாக்கா, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பசுமை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
