
மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா இன்று பதவியேற்ற நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது : மதுரை மாநகரில் மக்களுக்கான சேவையை சிறப்பாக செய்வேன், குற்றங்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கொரோனா தடுப்பு பணிகளில் காவல்துறையினர் சிறப்பாக ஈடுபடுத்துவோம், காவல்துறையினரை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் குற்றங்களை கட்டுப்படுத்த தகவல்தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்தவுள்ளோம், மாநகர பகுதிகளில் ப்ரண்ட் ஆப் போலிஸ் செயல்பாட்டிற்கு தடை குறித்து விரைவில் அறிவிகக்கப்படும், குற்றங்களில் ஈடுபட்டால் சட்டப்படி மட்டுமே நடவடிக்கை , விசாரணைக்கு வருபவர்களை தேவையின்றி தவறான வார்த்தைகளோ பேசவோ, அடிக்ககூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, மாநகர் பகுதிகளில் கொலை, கொள்ளை குற்றவியல் சம்பவங்களை தடுக்க அதிக அளவிற்கான வாகன சோதனை நடத்தப்படும் , மதுரை மாநகர பகுதிகளில் பணிபுரிய காவல்துறையினருக்கு மன அழத்தம் உள்ளதா என்பது குறித்து பரிசோதிக்கப்படும், மாநகரில் உள்ள காவல்நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள சிசிடிவி கேமிராக்களின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.
பேட்டி திரு.பிரேம்ஆனந்த் சின்ஹா – மாநகர காவல் ஆணையர்.