தருமபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் வணிக நிறுவனங்கள் மூடல் நான்குரோடு சந்திப்பு கடை வீதி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடியது .

662

தருமபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் வணிக நிறுவனங்கள் மூடல் நான்குரோடு சந்திப்பு கடை வீதி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடியது . கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள். வணிக நிறுவனங்கள் .காய்கறி கடைகள் மளிகை கடைகள் என அனைத்தும் நேற்று மாலை 4 மணிக்கு மூடப்பட்டன.முழு ஊரடங்கு காரணமாக தருமபுரி நகரப் பகுதி பேருந்து நிலையம் சுற்றுப்புற பகுதிகள். 4ரோடு. கடை வீதி. உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. சாலைகளில் சுற்றித் திரிபவர்களை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.மாவட்டத்தில் இதுவரை 112 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதில் 50 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 62 நபர்கள் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.தருமபுரி மாவட்டத்தில் அரசின் இபாஸ் பெறாமல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியரும் மலர்விழி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here