
தமிழக முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று வாரங்கள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்க அரசு ஆணை பிறப்பித்தது … இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் புதுக்கோட்டை மாவட்ட மக்களிடம் முழு ஊரடங்கு கடைபிடிக்க தொடர்ந்து அறிவுரை வழங்கினார்கள்.. புதுக்கோட்டை மாவட்ட நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசு உத்தரவுப்படி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது-.
புதுக்கோட்டை நகர் பகுதிகளில் குறிப்பாக கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதி, புதிய பேருந்து, சாந்தநாதபுரம் பிருந்தாவனம், திலகர்திடல் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது..
ஆங்காங்கே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட வருகின்றனர்..
அத்தியாவசிய தேவையான மருந்தகங்கள், ஆவின் பால், அம்மா உணவகம் ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ளது.. மற்றபடி கடைகள் யாவும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது…



