
13 வயது சிறுமி பலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் தந்தை உள்ளிட்ட இருவர் மீது குண்டாஸ்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் மே மாதம் 18 ஆம் தேதி 13 வயது சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு பலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் தந்தை பன்னீர் அவரது உறவினர் குமார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் சிறுமியின் தந்தை பன்னீர் மற்றும் அவரது உறவினர் குமார் உள்ளிட்ட இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
