
முழு ஊரடங்கு தாராபுரம் நகரம் முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
தாராபுரம்_ஜூலை-5
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று முழு ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது இதனால் தாராபுரத்தில் இயங்கக்கூடிய அனைத்து வணிக நிறுவனங்களும் காலை முதலே அடைக்கப்பட்டிருந்தது மக்களின் அத்தியாவசிய தேவையான பால் மற்றும் மருந்துகடைகள் மட்டும் திறந்திருந்தன எப்பொழுதும் பரபரப்பாக இருக்ககூடிய கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன தாராபுரத்தில் 100% கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது தாராபுரம் காவல்துறையினர் நகர்முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்…
தாராபுரம் செய்தியாளர் ஜாபர்


