
முழு ஊரடங்கையொட்டி மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் திடீர் ஆய்வு.
நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி,அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன், முழு ஊரடங்கு பின்பற்ற படுகிறதா என செந்துறை ரவுண்டானா பகுதியில் உள்ள சோதனை சாவடியில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தாவது ,அரியலூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் முழு ஊரடங்கு உத்தரவிற்குகாவல்துறையினருக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளில் பிற மாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து இ பாஸ் மற்றும் மருத்துவ அவசர தேவைக்கு உரிய அனுமதி இன்றி வரும் வாகனங்களுக்கு மாவட்டத்திற்கு உள்ளே வர காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. மேலும் அவ்வாறு இ-பாஸ் இன்றி மாவட்டத்திற்குள் நுழைய முயலும் வாகனங்கள் மட்டும் நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்.
இவ்வாய்வின்போது ,அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் ,அரியலூர் மது அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி மகாலட்சுமி உள்ளிட்டோர் இருந்தனர்..