கட்டுடல்¸ ஆரோக்கியம் வேண்டுமா மிதிவண்டியை பயன்படுத்துங்கள் – தலைமை காவலர் அறிவுரை

388

கட்டுடல்¸ ஆரோக்கியம் வேண்டுமா மிதிவண்டியை பயன்படுத்துங்கள் – தலைமை காவலர்

சென்னை¸ நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் திரு.சரவணன் அவர்கள் அன்றாட பணிக்கு இன்னமும் மிதிவண்டியை பயன்படுத்தி வருகிறார். இது பற்றி அவர் கூறுகையில்:- சைக்கிள் ஓட்டுவதன் மூலம் என்னால் வலுவாக இருக்க முடிகிறது. இன்னமும் எனக்கு தொப்பை இல்லை. மேலும் வாழ்க்கை முறை நோய்களும் எனக்கு இல்லை. வீட்டிலிருந்து வருவது¸ பணிநேரத்திலும் மிதிவண்டி பயன்படுத்துவது என ஒவ்வொரு நாளும் 40 கிலோமீட்டருக்கு அதிகமாக மிதிவண்டி ஓட்டுகிறேன். மிதிவண்டியை பயன்படுத்துவதால் நல்ல உறக்கம் மற்றும் குடல் சம்மந்தமான நோய்கள் எனக்கு இல்லை. மிதிவண்டி பயன்படுத்துவது சுற்றுசூழலை பாதிக்காத போக்குவரத்து ஆகும். பணத்தை சேமிப்பதற்காக மட்டும் நான் சைக்கிள் ஓட்டவில்லை¸ உடல் நலத்தை பாதுகாக்கவும்¸ மருத்துவ செலவுகளை தவிற்பதற்காகவும் தான். ஓய்விற்கு பின்னரும்¸ நான் சைக்கிள் ஓட்டுவேன். மேலும் நான் சைக்கிள் ஓட்டுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சைக்கிள் ஓட்டுவதை தொடங்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக பலர் கூறியுள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here