திருச்சி கண்டோன்மெண்ட் தலைமைக்காவலர் திருமுருகன் மனிதநேய‌செயல் பாராட்டுக்குரியது

698

திருச்சி

திருச்சி கண்டோன்மெண்ட் தலைமைக்காவலர் திருமுருகன் மனிதநேய‌செயல் பாராட்டுக்குரியது

ரோந்து பணியில் இருந்த பொழுது படத்திலுள்ள அந்த அம்மா திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உட்கார்ந்து இருந்தார். அவரின் பெயர் பழனியம்மாள் 50, கணவர் பெயர் பாலகிருஷ்ணன் எண்.20 பூக்காரத்ர தெரு மச்சுவாடி புதுக்கோட்டை என்றும் அவரது மகன் பெயர் கணேஷ் திருமயத்தில் மளிகைக் கடை வைத்து உள்ளார் என்றும் இவர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திருப்பூரில் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றதாகவும் அங்கு வேலை இல்லை என்ற காரணத்தால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருப்பூரிலிருந்து கரூருக்கு பஸ்ஸில் வந்ததாகவும் அங்கிருந்து பஸ் இல்லாத காரணத்தினால் நடந்தே திருச்சி வந்ததாகவும் கடந்த இரண்டு நாட்களாக திருச்சியில் இருப்பதாகவும் கூறினார்
அந்த தாயார் நேற்று இரவு முதல் சாப்பிடவில்லை என்பதை அறிந்த தலைமை காவலர் உடனடியாக அந்த அம்மாவிற்கு உணவு தண்ணீர் மற்றும் பிஸ்கட் வழங்கி இந்த அம்மாவை சாப்பிட வைத்து மற்றும் அவரது மகன் கணேஷ் மற்றும் மகள் ராமலட்சுமி ஆகியோரிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
அவருடைய மகனிடம் *வாகனம் ஏற்பாடு செய்து அனுப்பட்டுமா என்று கேட்டதற்கு எங்கள் அம்மாவின் ஒப்புதலை கேளுங்கள் என்று பொறுப்பில்லாமல் பதில் கூறினார்.

இதை அறிந்த தலைமை காவலர் அந்த அம்மாவிடமே உங்களை *திருச்சியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விடட்டுமா என்று கேட்டார் அந்த அம்மாவும் சம்மதம் தெரிவித்தார்..மேலும் அவர்கள் வந்து அழைத்து செல்வதாக தெரியவில்லை என்ற காரணத்தினால் அவர்களிடம் அந்த அம்மாவை திருச்சி கிராப் பட்டியில் உள்ள கங்காரு முதியோர் இல்லத்தில் ஒப்படைத்து விடுகிறேன் என்று அவர்களிடம் தெரிவித்தார்.

அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். உடனடியாக கங்காரு கருணை இல்லம் முதியோர் இல்லத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் வந்து அந்த அம்மாவை அழைத்து சென்றார்கள்

காவல் பணியோடு சேர்த்து காவலர்கள் இப்படிப்பட்ட சமூக பணியைச் செய்வதால் சமூக ஆர்வலர்களிடமும், பொதுமக்களிடமும் பாராட்டையும் வாழ்த்தையும் திருமுருகன் பெற்று வருகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here