வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை அழைக்கலாம் போலீஸாருக்கு டிஐஜி காமினி அறிவுரை…

699

வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை அழைக்கலாம் போலீஸாருக்கு டிஐஜி அறிவுரை…

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் ஆகியோர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பிறகு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர் இந்த வழக்கு குறித்து சிபிஐ ஐஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர் சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் குற்றவாளிகளை கையாளும் முறைகள் குறித்து டிஐஜி எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் போலீசாருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர் அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் காட்பாடி குடியாத்தம் சப் டிவிஷன் கிழக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள் ஆலோசனைக் கூட்டம் வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது கூட்டத்தில் எஸ்பிபி ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார் இதழ் பிஐஜி காமினி தலைமையேற்று பேசினார் வேலூர் மாவட்டத்தில் வழக்குப் பதிவு செய்யும் போலீசார் சம்பந்தப்பட்ட நபரின் வயது குறித்து அறிந்திருக்க வேண்டும் எந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அவர்களை கைது செய்யலாமா ?? கூடாதுதா?? என்பதை போலீசார் தெரிந்து கொள்வது அவசியம் வேலூர் காட்பாடி குடியாத்தம் சப் ஸ்டேஷன்களில் கைது செய்யப்படும் நபர்களை கைது செய்து காவல் நிலையத்தில் அழைத்துச் செல்லும் முன்பாக கேர் சென்டரில் அவர்களை பரிசோதிக்க வேண்டும் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் நன்றாக பழக வேண்டும் வழக்கில் தொடர்புடைய அவர்களுக்கு சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அழைக்கலாம் குற்றவாளிகளை கைது செய்யும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் வழக்குப்பதிவு செய்த உடனேயே குற்ற சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்யாமல் தீர விசாரித்த பிறகு கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் பேசினார் கூட்டத்தில் டிஎஸ்பிக்கள் இன்ஸ்பெக்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்….
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்…

சாத்தான்குளம் சம்பவம் எதிரொலியாக வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து டிஐஜி காமினி போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார் உடன் எஸ்பி பிரவேஷ்குமார்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here