கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் நிலையத்தில் கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க விழிப்புணர்வு நடைபெற்றது.
இதில் கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர்களுக்கு முக கவசம் அணிந்து வரும் பயணியர் களுக்கு சானிடைசர் முக கவசம் கட்டாயம் அணியவேண்டும் கார் மற்றும் ஆட்டோவில் வரும் பயனிகள் ஓட்டுனர் உள்பட 3 பேர் மட்டும் ஏற்றி செல்ல வேண்டும் கொரோனா வைரஸ் தடுக்கும் விதமாக கட்டாயம் அனைவரும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று பல்வேறு ஆட்டோ ஓட்டுனர் கார் ஓட்டுனர்கள் கலந்துகொண்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் பயிற்சி உதவி ஆய்வாளர் கார்த்திக் பாண்டியன் மற்றும் காவல்துறையினர் மற்றும் பலர் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.