
அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஆலோசனை கூட்டம்–
செங்கல்பட்டு, ஜுலை.08: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம்
பேரூராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டி அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் குடியிப்போர் நல சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்
அச்சிறுபாக்கம் பேரூராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள், அச்சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுரேஷ், ஆரம்ப சுகாதார ஆய்வாளர் கண்ணியப்பன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில்
அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர்
சரவணன் தலைமையில் கையுறைகள், முககவசம், கிருமிநாசினிகள்
வழங்கப்பட்டது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கையாக
கடை முன்பு கோடு போடுவது, கடை திறக்கும் நேரம்,
மூடும் நேரத்தை கடைபிடித்து முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் கிடையாது என்று சொல்ல வேண்டும் எனவும் சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்க வைத்து வியாபாரம் செய்யவேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.