அரியலூரில் சமூக இடைவெளியுடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி. ஆர். சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

337

சமூக இடைவெளியுடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி. ஆர். சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்.

அரியலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்V.R.ஸ்ரீனிவாசன் தலைமையில் ,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணன் முன்னிலையில் இன்று சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரங்கப் பகுதியில் பணிபுரிபவர்களின் நலன் கருதி விபத்து ஏற்படாவண்ணம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கனரக வாகனங்களுக்கு முறையான சான்றிதழ் மற்றும் Road worthy certificate இருத்தல் அவசியம். வாகனங்களில் முகப்பு விளக்குகள் சமிக்கை விளக்குகள் ஒலி எழுப்பான்கள் முறையாக பராமரிக்க வேண்டும். கனரக வாகனங்கள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கனரக வாகனங்களின் பெயர் பலகை மற்றும் பதிவு எண் போன்றவை தெளிவாக தெரிய வேண்டும். கனரக வாகனங்களில் அதிகம் பாரம் ஏற்றுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் தார்ப்பாய் மூலம் கட்டப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்வதைத் தவிர்க்க வேண்டும். கனரக வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே இயக்க வேண்டும். மீறும் ஓட்டுநர்கள் மீதும் ,நிர்வாகத்தின் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். போதைப் பொருட்கள் பயன்படுத்தும் ஓட்டுநர்களை பணியிலிருந்து நீக்கி நல்ல தகுதியான நபர்களை பணியில் அமர்த்த வேண்டும். ஓட்டுநர்கள் கண்டிப்பாக சீருடை அணிந்து இருக்க வேண்டும். வாகனத்தில் கண்டிப்பாக ஒளிரும் பட்டை ஒட்டி இருக்க வேண்டும்.வாகனங்களில் கண்கூசும் விலங்குகளை பயன்படுத்த கூடாது. வாகனம் ஓட்டும் பொழுது கண்டிப்பாக ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது மீறும் பட்சத்தில் ஓட்டுனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளில் கனரக வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.
என அறிவுறுத்தினார். மேலும்
இருசக்கர வாகனங்களில் செல்லும்பொழுது முக கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து இயக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், சிமெண்ட் ஆலை அலுவலர்கள், 108 ஆம்புலன்ஸ் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற துணை நிற்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.
இதில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகர போக்குவரத்து ஆய்வாளர்கள் மதிவாணன் மற்றும் ஆனந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

அரியலூர் மாவட்ட செய்தியாளர் பாலா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here