
அரியலூரில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி டாக்டர் .கே. பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்
அரியலூரில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணியினை தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி டாக்டர். கே. பழனிச்சாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அரியலூர் அரசு கலைக்கல்லூரி அருகே 26 ஏக்கர் பரப்பளவில் ரு347 கோடி மதிப்பில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகம், 700 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், மருத்துவக் கல்லூரி அலுவலர்கள் குடியிருப்பு ,மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர் தங்கும் விடுதிகள், உள்ளிட்டவை தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி டாக்டர் கே பழனிச்சாமி தொடங்கி வைத்தார் இந்நிகழ்வின் போது தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தமிழக அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் ,சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வினையோட்டி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற காணொளிக்காட்சி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமை ஏற்று அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான நோக்கம், அதனால் மக்கள் அடையும் நன்மைகள் குறித்தும் விளக்கி, அரசுக்கு மனமார்ந்தநன்றியை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி .ஆர். ஸ்ரீனிவாசன், அரசு மருத்துவக் கல்லூரி டீன் முத்துகிருஷ்ணன், மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறை துணை இயக்குனர் ஹேமச்சந்த்காந்தி, கோட்டாட்சியர் பாலாஜி, வட்டாட்சியர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனையடத்து அரியலூர் அரசு கலைக் கல்லூரி அருகே மருத்துவ கல்லூரி அமைய உள்ள இடத்தில் நடைபெற்ற பூமிபூஜை தொடக்க விழாவில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் களின் கூட்டமைப்பு தலைவர் பிரேம்குமார் முன்னிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.ஆர். சீனிவாசன்,துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஹேமசந்த் காந்தி, கோட்டாட்சியர் பாலாஜி,அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ரவிசங்கர், இருப்பிட மருத்துவர் டாக்டர்ரமேஷ், பொதுப்பணித்துறை மருத்துவப் பிரிவு செயற்பொறியாளர் சிவகுமார், மணியரசு, உதவி பொறியாளர்கள் வெங்கடேஷ், பாபு ,வட்டாட்சியர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்று கல் எடுத்து வைத்து மலர்தூவி கட்டிட பணியை துவக்கி வைத்தனர். முன்னதாக அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு திரண்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் தலைமையில் தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் முன்னிலையில் புதிதாகஅமைய உள்ள அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள்ஒ.பி. சங்கர் ,அக்பர் ஷெரிப், ஐடி விங் மு.சாமிநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் பொய்யூர் பாலசுப்பிரமணியம், வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகரச் செயலாளர் ஏ. பி. செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


