
கோவை போத்தனூர் காவல் நிலையம் மீண்டும் மூடல்
கோவை போத்தனூர் காவல் நிலைய பெண் காவலருக்கு கொரோனா உறுதி – இரண்டாவது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டது. கடந்த மாதம் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் 3 போலீஸாருக்கு கொரோனா தொற்து உறுதியானதால் காவல் நிலையம் மூடப்பட்டது.பின்னர் தொற்று நீக்கம் செய்யப்பட்டு காவல் நிலையம் திறக்கப்பட்டது.இந்நிலையில் மீண்டும் பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் மீண்டும் அங்கு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.அலுவலக பணிகள் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.