
சிதம்பரம் கோட்ட காவல் துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறி வியாபாரிகள், வனிகர் சங்கத்தினர் ஆகியோருக்கான விழிப்புணர்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் சிதம்பரம் கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் எஸ். கார்த்திகேயன் பங்கேற்று விழிப்புணர்வு உரையாற்றினார் . அவர் பேசுகையில் ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள் சமூக இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும். கிருமிநாசினி அவசியம் தெளிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் சி.முருகேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ்குமார், செயலாளர் முரளிதரன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறி வியாபாரிகள் பங்கேற்றனர்.
சிதம்பரம் சபாபதி



