
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் நேரடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க இரண்டு புதிய எண்கள்அறிமுகம் – காஞ்சிபுரம் சரக காவல் துணை தலைவர் சாமுண்டீஸ்வரி அறிவிப்பு—
செங்கல்பட்டு, ஜுலை.08: புதிதாக பதவி ஏற்று கொண்ட செய்தியாளர்களை சந்தித்த டிஐஜி சாமுண்டீஸ்வரி கூறுகையில்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ரீதியாக ரவுடிகளின் பட்டியலை எடுத்து அதை மூன்று பிரிவுகளாக பிரித்து அவர்களை தீவிர கண்காணிப்பில் கண்காணித்து வந்தோம். அதேபோல் ரவுடிகளை ஒடுக்குவதற்கு அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்போது இதே போல காஞ்சிபுரம் காவல் சரகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகள் பட்டியலில் எடுத்து தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் .
மேலும் தேவைப்பட்டால் கைது செய்து குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
மேலும் மக்களின் பாதுகாப்புக்காக புதியதாக இரண்டு எண்கள் அளிக்கப்பட்டுள்ளது. 7397001493,7397001398 ஆகிய இரண்டு எண்களில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் மக்கள் நேரடியாக எங்களிடம் தகவல் பரிமாற்றம் செய்யலாம் என தெரிவித்தார். மேலும் அவர்களுடைய ரகசியம் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.
வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக காவல் துறைக்கு அதிக அளவு வேலை வெளிவருகிறது. இதனால் அவர்களுக்கு அதிக அளவு மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளது. டிஜிபி தலைமையில் கடந்த வாரம் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் காவல் அதிகாரிகளின் துவங்கி அடிமட்ட காவலர்கள் அவரை அனைவருக்கும் மனஅழுத்தத்தை குறைப்பதற்காக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அந்த பயிற்சியில் காவலர்களுக்கு யோகா மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது குறித்த கவுன்சிலிங் அழைக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.