
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் காவல் துறையினர் சார்பில் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே 6-7-2020. அன்று மாலை 4.30 மணியளவில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இப்பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இதில் காவல் ஆய்வாளர் முனிசேகர் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் அவசியம் குறித்து ஆட்டோ ஓட்டுநர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் முக கவசம் அனிவதின் குறித்து சமூக இடைவெளியை எவ்வாறு பின்பற்ற வேண்டுமென அவர்களுக்கு அறிவுரை கூறினார். ஆட்டோ ஓட்டுநர்களின் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் விளக்கி கூறினார். திருக்கழுக்குன்றம் நகரின் சட்ட ஒழுங்கை பேணி காப்பதற்காக முதல் கட்டமாக ஆட்டோ ஓட்டுநர்களிடையே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் இதனை தொடர்ந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அடுத்த கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று காவல் ஆய்வாளர் முனிசேகர் தெரிவித்தார்.
