Home தமிழ்நாடு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று தொலைத்தொடர்பு கான வாக்கிடாக்கியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண்சக்திகுமார் வழங்கினார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று தொலைத்தொடர்பு கான வாக்கிடாக்கியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண்சக்திகுமார் வழங்கினார்.

0
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று தொலைத்தொடர்பு கான வாக்கிடாக்கியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண்சக்திகுமார் வழங்கினார்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று தொலைத்தொடர்பு கான வாக்கிடாக்கியினை மாவட்ட SP வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன

இம்மருத்துவமனையில் இரண்டு கட்டிடங்களில் நான்கு மாடி கட்டிடமும் மூன்று மாடி கொண்ட கட்டிடமும் அமையப்பெற்றுள்ளது

இதில் தற்போது நான்கு அடுக்குகளைக் கொண்ட முதல் கட்டிடத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன

நான்கு தளங்களிலும் தற்பொழுது நோயாளிகள் பராமரிக்கப்பட்டு வரும் சூழலில் தகவல் தொடர்பு மிகப்பெரிய சவாலாக இருந்தது எனவே அதை கருத்தில் கொண்டும் பாதுகாப்பு நடைமுறைகாகவும் மருத்துவர்களின் துறையினருக்கும் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் வாக்கிடாக்கி எனப்படும் தொலைத் தொடர்புச் சாதனத்தை மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் இன்று புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சிசுந்தரம் வழங்கினார்.

இதன்மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ துறையினருக்கும் உயர் அதிகாரிகளுக்குமான தொலைத்தொடர்பில் இணக்கம் ஏற்படும் என்றும் நோயாளி தன்னுடைய உடல் நிலையை அவ்வப்போது தெரிந்து கொள்வதற்கு இந்த சாதனம் மிகுந்த உதவியாக இருக்கும் என்றும் நோயாளிகள் தொலைத் தொடர்புச் சாதனத்தை தொடாமல் பேசுவதற்கு இது உதவியாக இருக்கும் என்றும் ஒரு வாக்கி டாக்கி லிருந்து எழுப்பப்படும் ஓசை அனைத்து நோயாளிகளும் கேட்கும் அளவிற்கு உள்ளதால் வாக்கி டாக்கிகள் மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் புதுக்கோட்டை காவல் துறை சார்பாக இன்று நான்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டதாகவும் இந்த வாக்கி டாக்கி இங்கு உள்ள முதல் கட்டிடத்தில் நான்கு தளங்களிலும் பயன்படுத்தப்படும் என்றும் இரண்டாவது கட்டிடம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அவர்களுக்கு தேவைப்படும் அளவில் வாக்கி டாக்கி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார் மேலும் வாக்கி டாக்கி இயக்குவதற்கு தானே முன்வந்து பயிற்சி அளித்து இருப்பதாகவும் இதன் மூலம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உயரதிகாரிகளுக்கு செய்திகளை பரிமாறிக் கொள்வது எளிமையாக உள்ளது எனவும் தெரிவித்தார்

முன்னதாக மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் வழங்கிய வாக்கிடாக்கியினை மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் மற்றும் மருத்துவர்கள் பெற்றுக்கொண்டனர்

பத்திரிக்கையாளர்களை சந்தித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் தற்போது வழங்கப்பட்டுள்ள வாக்கி டாக்கியின் உபயோகம் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் தொடர்ந்து வரக்கூடிய காலங்களில் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிக்கு அதிக அளவில் வாக்கிடாக்கி பயன்படுத்தும் வண்ணம் புதிதாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தமிழகத்தில் முதல் முறையாக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்பு மற்றும் மருத்துவ துறைக்கான இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த வாக்கி டாக்கி மிகுந்த உதவியாக இருக்கும் என்றும் விரைவில் இது மருத்துவ கல்லூரிக்கு பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here