
கொரானா தொற்றுநோய் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள் பறிமுதல் செய்கின்றனர் காவல்துறை அதிகாரிகள் வாகனத்தை பறிகொடுத்த நபர்களிடம் சில திருட்டு கும்பல் தாங்கள் வழக்கறிஞர்கள் என்றும் தங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் தெரியும் என்றும் பறிமுதல் செய்த வாகனங்களை பணம் கட்டி எடுத்துவரலாம் என்று ஏமாற்றுகிறார்கள் இதனை அறிந்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் காவல்துறை அதிகாரிகள் காவல்நிலையத்தின் முன் விளம்பர பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது அதில் யாரிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் எந்த அபராதமும் வசூலிப்பதில்லை என்றும் உங்கள் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்து வாகனங்கள் கொடுக்கப்படும் என்று உள்ளது இதனை அறிந்த வாகனங்கள் பறிகொடுத்த நபர்கள் தெளிவடைகின்றனர் காட்டுமிராண்டி என்று நாம் அழைக்கும் காவல்துறையில் கனிவான இதயங்களும் உண்டு என்பதற்கான செய்தி இதுவாகும்….
