
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்….
ஆர்க்காடு பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் வரவேற்புரையாற்றினார் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் கலந்துகொண்டு காவல் நிலையத்தில் வரும் பொதுமக்களிடன் காவல் நிலைய அதிகாரிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விளக்கினார்.
சிறப்பு விருந்தினராக வேலூர் டிஐஜி காமினி கலந்துகொண்டு
கைது நடவடிக்கைகள் போலிஸ் பொதுமக்கள் நல்லுறவு மனித உரிமை மீறல்கள் குறித்தும்
காவல் நிலையத்தில் புகார் சம்பந்தமான வழக்கு தொடர்பான அறிவுரைகளை வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்ட காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர்
சிறப்பு தனிப்பிரிவு ஆய்வாளர்கள்
போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் ஆலோசனையில் கலந்து கொண்டனர். முடிவில் ராணிப்பேட்டை கோட்ட துனை கண்காணிப்பாளர் பூரணி நன்றி கூறினார்….
