திருச்சி ஜூலை 8
திருச்சி சிறுமி கங்காதேவி மரணத்தில் கொலைக்கும் தற்கொலைக்கும் சரிபாதி சாத்தியக்கூறுகள்
DiG ஆனி விஜயா பேட்டி
திருச்சி டிஐஜி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆனி விஜயா
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
சிறுமியின் பெற்றோர்,உறவினர்கள், நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்.
பொதுமக்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.
முழு விசாரணை முடிந்த பிறகே கொலையா? தற்கொலையா? என்பது குறித்து முழுமையாக தெரியும்.
இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை.
தேசிய குழந்தைகள் உரிமைகள் நல ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தமிழ்நாட்டில் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.திருச்சி மாவட்டம்
தற்போது விசாரணையில் உள்ள இருவரிடம் சிறுமி நண்பர்கள் போல் பழகி உள்ளார்.அவர்களிடம் எல்லா தனிப்பட்ட விவகாரங்கள் குறித்தும் பேசி உள்ளார்.சிறுமியின் வயதுக்குரிய நடவடிக்கையில் ஒன்று தான்.
இது குறித்தும் விசாரணை செய்து வருகிறோம்.
கங்கா தேவி அவரின் பெற்றோருக்கு மட்டும் குழந்தை அல்ல,அனைத்து தாய்மார்களுக்கும் குழந்தை போன்றவர் தான்.எனவே எந்த காரணத்திற்காகவும் குற்றவாளிகளை தப்பிக்க விடமாட்டோம்.தண்டனை பெற்று தருவோம்.
விசாரணை என்பது ஒரு கலை.கிடைத்த தடயங்கள்,தகவல்கள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.இறுதி விசாரணை என்பது முக்கியமானது.அதன் பிறகே நடந்தது என்ன என்பது தெரியவரும்.
குழந்தைகள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.மத்திய மண்டல காவல் துறை தலைவர் ஜெயராம் வழிக்காட்டலின்படி ஜியபுரம் சரகத்திற்குட்பட்ட மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமியர்களை கொண்டு அந்த கிராம மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உள்ளதாக கூறினார்.
Trichy JK
9894920886