தொடர்ந்து பேசிய டிஐஜி..
திண்டுக்கல் தேனி மாவட்ட காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கவும், காவலர்கள் பொதுமக்களுடன் கனிவாக நடந்து கொள்ளவுமா இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் காவலர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மூச்சுப் பயிற்சி அவசியம். இதன் மூலம் நுரையீரலை பாதுகாத்து கொரோனா வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் இந்த யோகா பயிற்சி பயனுள்ளதாக அமைந்துள்ளது. திண்டுக்கல் தேனி மாவட்ட காவலர்கள் பொதுமக்களுடன் நல்லுணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.


