
திருமானூரில் காவல்துறை சார்பில் வணிகர்களுக்கு கொரோனா வைரஸ் மற்றும் போதைப் பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி திருமானூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் இமானுவேல் ராயப்பன் தலைமையில், திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஜெயக்குமாரி ஆகியோர் முன்னிலையில் காவல்துறை சார்பில் இன்று MSK மஹாலில் திருமானூர் வணிகர்களுக்கு கொரோனா வைரஸ் மற்றும் போதைப் பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வியாபாரத்தின் போது முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் பொருள் வாங்க வருபவர்களும் முக கவசம் அணிந்து வரவேண்டும், அவ்வாறு முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு வணிகர்கள் பொருட்களை வழங்க கூடாது என்றும் அறிவுறுத்தினர். சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். பொருட்கள் வாங்கும் பொழுதும் வாங்கிய பின்பும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கடைகளை மாலை 8 மணிக்கு மேல் திறந்து வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். போதைப் பொருட்களான சிகரெட், புகையிலை, மற்றும் ஹான்ஸ், போன்ற பொருட்களை வாங்கவோ விற்கவோ கூடாது எனவும் காவல்துறை சார்பிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சார்பிலும் வணிகர்களுக்குஅறிவுறுத்தப்பட்டது.இதில் ஏராளமான வணிகர்கள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
செய்தி. பாலா, மாவட்ட செய்தியாளர் அரியலூர் மாவட்டம்