
திருவள்ளூர் அருகே சாலையில் நடந்து செல்பவர்கள் இடம் கத்தி முனையில் வழிப்பறி செய்து வந்த 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்,
திருவள்ளூர் ஜூலை.8,
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை சேர்ந்தவர் பைராகி(38) வடமாநிலத்தை சேர்ந்த இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் கடைவீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இரண்டு இரு சக்கர ஊர்திகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பை ராகியை வழிமறித்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டியபோது பணம் தர அவர் மறுத்ததால் ஆத்திரம் அந்த கும்பல் அரிவாளால் பைராகி யின் தலையில் வெட்டி விட்டு அவரிடமிருந்த 3 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியது வழிப்பறி கும்பல் தாக்கியதில் மயக்கம் அடைந்து சாலையில் விழுந்து கிடந்த அவரை அப்பகுதியில் நடந்து சென்ற சிலர் மருத்துவமனையில் சேர்த்தனர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பைராகி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த செங்குன்றம் காவல்துறையினர் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகள் குறித்து நடத்திய விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது சென்னை மாதா வார்த்தை சேர்ந்த சுரேந்தர்(21) ரூபேஷ்(25) மற்றும் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த சரண்(19) பாரதி(20) விஜய்(21) ஆகியோர் என்பதும் இவர்கள் தொடர்ந்து சாலைகளில் தனியாக நடந்து செல்பவர்கள் இரு சக்கர ஊர்தியில் செல்பவர்களை கத்திமுனையில் வழிமறித்து அவர்கள் அணிந்திருக்கும் நகை கைபேசி பணம் ஆகியவற்றைப் பொருத்தி செல்வதை தொழிலாக கொண்டு செயல்பட்டு வருவதும் தெரியவந்தது இதனையடுத்து 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு இரு சக்கர ஊர்திகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் நவீன்.