தேனி மாவட்ட காவல்துறை சார்பாக காவலர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி வழங்கப்பட்டது.

447

தேனி மாவட்ட காவல்துறை சார்பாக காவலர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி வழங்கப்பட்டது. தேனி மாவட்ட காவல் துறையினருக்கு
உடல் நலத்தை பேணி காக்கவும், மன
அழுத்தத்தில் இருந்து தங்களை
விடுவித்துக் கொள்ளவும். மற்றும்
கொரோனா தொற்று நோயிலிருந்து
பாதுகாத்துக் கொள்ளவும் 08 : 07: 2020
தேதி தேனி மாவட்ட ஆயுதப்படை
மைதானத்தில் போதிய சமூக
இடைவெளியுடன் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் திரு E.சாய்சரண்
தேஜஸ்வி,இ.கா.ப, அவர்கள்
தலைமையில் காவல் அதிகாரிகள்
மற்றும் ஆளிநர்கள் சுமார் 250
இருபாலர் காவலர்களுக்கும் யோகா
பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி
வழங்கப்பட்டது. இப்பயிற்சியை தேனி
அல்லிநகரத்தை சேர்ந்த யோகா
மாஸ்டர் திரு. முத்தையா என்பவர்
யோகா பயிற்சி அளித்தார்.

இப்பயிற்சியில் அனைவரும்
ஆர்வத்துடன் பங்கேற்றனர் மேலும்
அவர்களுக்கு தங்களது இல்லங்களில்
நாள்தோறும் செய்ய வேண்டிய
பயிற்சியும் பயிற்றுவிக்கப்பட்டு இதில்
அனைவருக்கும் தொடர்ந்து யோகா
மற்றும் மூச்சுப் பயிற்சியும் செய்து
உடல் நலத்தை மேம்படுத்தவும் மன
அழுத்தத்தில் இருந்து விடுபடவும்
அறிவுரைகள் மற்றும் பயிற்சிகள்
வழங்கப்பட்டது. பெரியகுளம் செய்திகளுக்காக எஸ்.கார்த்திகேயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here