பணிச்சுமை காரணமாக மனச் சோர்வடைந்து உள்ள போலீசாருக்கு புத்துணர்ச்சியும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கச் செய்யும் வகையில் யோகா பயிற்சி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது- நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஆர்வத்துடன் பங்கேற்றனர்—
காஞ்சிபுரம், ஜுலை.09: கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் போலீசார் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
பணிச்சுமையின் காரணமாக மனச்சோர்வுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட போலீசார் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசாரின் மனச்சோர்வை போக்கிட யோகா பயிற்சியை நடத்திட காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டிருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் உட்கோட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், பகுதியை சேர்ந்த காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் ஆகியோருக்கு மனச்சோர்வை போக்கும் வகையிலும்,நோய்
எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையிலும் யோகா பயிற்சி வகுப்புகள் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் செயல்படும் மகாயோகம் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட யோகாசன பயிற்சி வகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஆர்வத்துடன் கலந்துகொண்டு யோகாசனப் பயிற்சியை மேற்கொண்டனர்.
யோகாசன பயிற்சியை மேற்கொண்ட போலீசாருக்கு கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கூடிய மஹாவாத சூப் வழங்கப்பட்டது.