புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் தொடர்ந்து தங்களது மாவட்டத்திலே பணியாற்றிட வேண்டும் மாவட்ட மக்கள் கோரிக்கை வலுக்கிறது … விவரம் உள்ளே..

1396

கடந்த வருடம் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. PV. அருண்சக்திகுமார் பொறுப்பு ஏற்ற முதல் இன்று வரை துரிதமாக நடவடிக்கைகள் எடுத்து பல வகையான குற்றங்கள் களைந்து புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றார்..

குறிப்பாக அரசு விதித்துள்ள தடையை மீறி செயல்பட்டவர்கள், மணல் கடத்தல், லாட்டரி சீட்டு விற்பனை, கள்ள சந்தை மது விற்பனை போன்றவற்றிக்கு எல்லாம் முற்று புள்ளி வைத்த நிகழ்வுகள் அனைத்தும் தரப்பு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது..

இந்த நிலையில் நேற்று வந்த பணிமாறுதல் அறிவிப்பில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண்சக்திகுமார் பணிமாறுதல் உயர்வு பெற்று சென்னைக்கு செல்ல உள்ளார் என்று வந்தது..

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் பணிமாறுதல் செய்தி கேட்டு புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

தொடர்ந்து சமூக வலைதளங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் பணிமாறுதல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here