
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி முன்னிலையில் இன்று மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்களுடன்
சிறப்பு ஆலோசனை கூட்டம் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் தொழிற்சாலைகளில் சுண்ணாம்புக்கல் ஏற்றும் கனரக வாகன உரிமையாளர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர்V.R.. ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தினார்
அப்போது அவர் கூறியதாவது:
கனரக வாகனங்களுக்கு முறையான சான்றிதழ்கள் மற்றும் road worthy certificate இருத்தல் அவசியம். முகப்பு விளக்குகளையும், சமிக்கை விளக்குகள் ஒலி எழுப்பான்கள் முறையாக பராமரிக்க வேண்டும். கனரக வாகனங்களில் speed governor, GPS, CCTV ஆகியவை பொருத்தி கண்காணிக்க வேண்டும். கனரக வாகனங்களில் கண்டிப்பாக கிளீனர் இருக்க வேண்டும். வாகனங்களை தினசரி தூய்மைப்படுத்தப்பட்டு சிமெண்ட் நிறுவனங்களின் பெயர்ப் பலகை மற்றும் பதிவு எண் போன்றவை தெளிவாக தெரிய வேண்டும். ஓவர்லோடு தவிர்க்கவேண்டும். சுண்ணாம்புக்கல் லாரிகள் முழுமையாக தார்ப்பாய் கொண்டு சுற்றுப்புறத்திற்கு மாசு ஏற்படாத வண்ணம் சுற்றப்பட்டு இருக்கவேண்டும். சாலையில் கனரக வாகனங்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. குறிப்பிட்ட வேகத்தில் மட்டும் செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்வதை தவிர்க்க வேண்டும். நடைமுறையில் உள்ள மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இயக்கப்பட வேண்டும். சுரங்கத்திலிருந்து லாரிகள் வெளியே வரும்பொழுது டயர்கள் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே சாலையில் இயக்கப்பட வேண்டும். வாகன ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமம் சரிபார்க்கப்பட்டு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தகுதியானவர்கள் மட்டுமே பணி அமர்த்தப்பட வேண்டும் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் நபர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்க செய்து தகுதியான நபர்களை பணியமர்த்தப்பட அறிவுறுத்தப்பட்டது. கனரக வாகன ஓட்டுனர்கள் கட்டாயமாக சீருடை மற்றும் பெயர் பொருத்தப்பட்ட பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும். வாகனங்களின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் கண்டிப்பாக ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். இரவில் கண் கூசும் முகப்பு விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக கனரக லாரிகளை இயக்க கூடாது. ஏர் ஹாரன் பயன்படுத்தக் கூடாது. ஓட்டுனர்கள் வாகனத்தை இயக்கும் பொழுது அலைபேசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு கனரக வாகனமும் போதுமான இடைவெளி விட்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாமல் வாகனங்களை இயக்க வேண்டும் என கூறினார். இக்கூட்டத்தில் ஏராளமான ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் ஓட்டுநர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
செய்தி: பாலா, ஜூனியர் போலீஸ் நியூஸ்.காம் அரியலூர் மாவட்ட செய்தியாளர்