கிராம பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு அளிக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வி .ஆர். ஸ்ரீனிவாசன் காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்..

254

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி இன்று ஆண்டிமடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் டேவிட், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு காவல்துறை சார்பில் ஆண்டிமடம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கூவத்தூர் ஊராட்சி குரும்பநூர், கே.என். குப்பம், அகினேஷ்புரம் ஆகிய பகுதிகளில் கிராம மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கூட்டம்நடத்தினர். மேலும் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில் கிராம மக்கள் விழிப்புணர்வு இன்றி சகஜமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். எனவே கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டது. அதில்பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றினை பற்றியும் அது பரவும் விதம் பற்றியும் விளக்கி இதிலிருந்து நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிராம மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, தனிமனித சுத்தத்தையும் பேணிக்காத்து, முகக் கவசங்கள் அணிய வேண்டுமென்றும், கைகளை அடிக்கடி நன்கு சுத்தம் செய்துகொள்வது நல்லது என்றும் கைகளின் மூலமே கொரோனவைரஸ் அதிக அளவில் பரவுகிறது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டது. மேலும்
குழந்தைதிருமணம்,குழந்தைளுக்கு எதிரான குற்றங்கள்,திருட்டு, தலைகவசம் அணிவது, மற்றும் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம் (VVC) ஆகியவைகள் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல கயர்லபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா தலைமையில் அம்பாபூர், காவனூர், கிராம பொதுமக்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here