கோவை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கான சிறப்பு கூட்டம் கோவை சரக காவல் துறை துணை தலைவர் திரு. நரேந்திரன் நாயர்.இ.கா.ப. அவர்களால் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது

586

இன்று 09.07.2020 ஆம் தேதி கோவை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கான சிறப்பு கூட்டம் கோவை சரக காவல் துறை துணை தலைவர் திரு. நரேந்திரன் நாயர்.இ.கா.ப. அவர்களால் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார், இ.கா.ப., கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்கணிப்பாளர்கள், மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் காவல்துறையினர் பொதுமக்கள் நல்லுறவு பற்றியும், கைது செய்வது பற்றி மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பற்றியும், கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் கைது செய்யப்பட்ட நபர்களின் உரிமைகள் என்ன? என்ன? மற்றும் கைது செய்யப்பட்ட பின்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி விளக்கம் அளித்தார்கள்.

மேலும் தமிழக காவல் துறை இயக்குனர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட பின்வரும் வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார்.

  1. ஊரடங்கு விதிமுறை மீறல் எப்போது, ​​எங்கு நடந்தாலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும். ஊரடங்கு விதிமுறை மீறல்களுக்கு யாரும் கைது செய்யப்படக்கூடாது.
  2. கடுமையான / ஜாமீனில் வெளிவராத குற்றங்களுக்கு மட்டுமே கைது செய்யப்பட வேண்டும்.

3.காவல் பணியாளர்கள் பொதுமக்களிடம் ஆக்ரோஷமான நடத்தையை காட்டக்கூடாது, மக்களை தேவையில்லாமல் அடிக்கக்கூடாது.

  1. பொதுமக்கள் நல்லுறவை வளர்த்துக் கொள்ள காவல்துறை முயற்சிக்க வேண்டும். சமூக காவல் முறைகள் பின்பற்றப்பட வேண்டும் மற்றும் பரவலான சமூக பங்களிப்பு கோரப்பட்டு சமூக காவல் பணியில் இணைக்கப்பட வேண்டும்.
  2. காவலில் உள்ள குற்றவாளிகளைக் கையாளும் போது காவல் வன்முறைக்கு இடமில்லாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.
  3. மாவட்ட தனிப்பிரிவு தரப்பில் தகவல் அளிப்பதில் எவ்விதமான தொய்வும் இருக்கக்கூடாது. அவர்கள் உடனுக்குடன் மூத்த அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
  4. ஊரடங்கு அமலாக்கத்தின் போது பொதுமக்களிடம் மனிதாபிமான / இரக்கமுள்ள அணுகுமுறையைப் கடைபிடிக்கவேண்டும். செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட பல்வேறு சுற்றறிக்கைகள் , போன்றவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தங்களது எல்லையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களுக்கு தினமும் தெரிவிக்க வேண்டும்.

மேலும் இது சம்மந்தமாக வழங்கப்படும் அறிவுறைகள் மற்றும் நெறிமுறைகளை அவர்தம் கையேட்டில் கட்டாயம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அதனை நிலைய பொறுப்பு அதிகாரி பார்வையிட்டு அதனை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here