

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். பாண்டியராஜன் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சைக்கோ அறக்கட்டளை சார்பாக கொரனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில் வயதான மற்றும் முடியாதவர்களுக்கு முகக் கவசம்,சோப்பு, அரிசி, மளிகை சாமான்கள், மற்றும் ஊட்டச்சத்து மாவு பொருள்கள் கொடுக்கப்பட்டது. இதில் துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், ஆய்வாளர் செல்வராஜ், ஈரோடு சீமா நிறுவனத்தின் இயக்குனர் விஸ்வநாதன் அவர்கள், சைக்கோ அறக்கட்டளை குழந்தைகள் நல குழுவின் தலைவர் கிறிஸ்துராஜ் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன் ஆகிய அனைவரும் கலந்துகொண்டு Covid 19 விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தனர்.