தேனி அருகே கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவரை சுடுகாட்டில் உடல் தகனம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு.. போலிசார் சமாதானத்துக்கு பிறகு உடல் தகனம்

630

தேனி கொரோனா நோய் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள். தேனி மாவட்டத்தில் 9.7.2020.தேனியில் பரபரப்பு கொரோனா வில் உயிரிழ்ந்தவரை சுடுகாட்டில் அனுமதிக்க மாட்டோம் என பொதுமக்கள் தேனி நகரில் இன்று மாலை 4:00 மணி அளவில் கொரோனா வின் கோர பசிக்கு இரையான ஒருவரின் உடல் க. விலக்கு அரசு மருத்துவமனையிலிருந்து தேனி சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது .இதனை அறிந்த தேனி சுடுகாட்டை சுற்றியுள்ள பொதுமக்கள் அங்கு திரண்டனர் , பின் அரசு ஆம்புலன்ஸை வழிமறித்து ஒரு ஜீப்பை நிறுத்தி உடலை சுடுகாட்டிற்கு உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என வாதிட்டனர் பதற்றமான சூழலில் தேனி நகரின் காவல் ஆய்வாளர் காவலர்களோடு வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் கலைந்து சென்றனர் , பின்னர் சடலம் சுடுகாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here