
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று கரோனா நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை நேரில் சென்று ஆய்வு செய்தார். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருவதாலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும் கம்பம் பகுதியில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் கம்பம் பகுதிகளில் உள்ள வார்டுகளில் காய்ச்சல் பரவுவதை குறித்து கம்பம் நகராட்சி அலுவலகர்களுடன்வீடு வீடாக சென்று சோதனை மேற்கொண்டார்.