Home தமிழ்நாடு கொரோனா வைரஸ் தொற்றால் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளான தூத்துக்குடி திரேஸ்புரம் தொம்மையார் கோவில் தெரு மற்றும் பிரையண்ட் நகர் ஆகிய பகுதிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கொரோனா வைரஸ் தொற்றால் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளான தூத்துக்குடி திரேஸ்புரம் தொம்மையார் கோவில் தெரு மற்றும் பிரையண்ட் நகர் ஆகிய பகுதிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

0
கொரோனா வைரஸ் தொற்றால் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளான தூத்துக்குடி திரேஸ்புரம் தொம்மையார் கோவில் தெரு மற்றும் பிரையண்ட் நகர் ஆகிய பகுதிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கொரோனா வைரஸ் தொற்றால் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளான தூத்துக்குடி திரேஸ்புரம் தொம்மையார் கோவில் தெரு மற்றும் பிரையண்ட் நகர் ஆகிய பகுதிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடியில் திரேஸ்புரம் பகுதியில் 51 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 31 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இப்பகுதியில் அதிக பேர் கொரோனா தொற்றால் பாதிக்ப்பட்டுள்ளதால் திரேஸ்புரம் தொம்மையார்கோவில் தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தூத்துக்குடி பிரையண்ட் நகரிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் பிரையண்ட் நகர் 9வது தெரு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதிகளை இன்று (10.07.2020) காலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், வடபாகம் காவல் ஆய்வாளர் திரு. அருள், தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. கிருஷ்ணகுமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும்பெருமாள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here