அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலைய சரகம் மகிமைபுரம் கிராமத்தில் வசிக்கும் நெரிக்குறவர் இன மக்கள் 50ற்க்கும் மேற்பட்டோர் வசித்து அவர்கள் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டனர்.
தகவலறிந்த அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் பரம சாந்தி குரூபின் உதவியுடன் மகிமைபுர மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்களை வழங்கினார்கள். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மகிமைபுர மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அந்த பகுதி மக்கள் அனைவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் சமூக இடைவெளியை கடைபிடிப்போம்,முக கவசம் அணிவோம் கொரோனா பரவுதலை தடுப்போம் மற்றும் அரசின் விதிகளை மதித்து செயல்படுவோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மோகனதாஸ் அவர்கள் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் திருமதி.தமிழரசி அவர்கள் ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி.ஆனந்தி அவர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.