
.
அரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலகவளாகத்தில் சமீபத்தில் மாவட்டத்தில் நடைபெற்ற விபத்துகளில்காயமடைந்தவர்களுக்குமீட்டு முதலுதவி செய்து உடனடியாக காவல் துறை மற்றும் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்த 9 நபர்களுக்கு “குட் சம ரிடன்’ வெகுமதி சான்றிதழை மாவட்டகாவல்துறைகண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் வழங்கினார்.
‘குட்சமரிடன்’வெகுமதிசான்றிதழை
1.திரு.லட்சுமணன் (28)
2.திரு.விஸ்வநாதன் (38)
3.திரு.கௌஷிக்
- அரவிந்த் (30)
5.திரு.குமார் (44)
6.திரு.பிரசாத் (26 )
7.திரு.வினோத் குமார் (31)
8.திரு.அன்பு ஜாலியன்( 28)
9.திரு.மாயகிருஷ்ணன் (20), உள்ளிட்டோருக்குவழங்கியபின்னர்
மாவட்டகாவல்துறைகண்காணிப்பாளர்வி.ஆர்.ஸ்ரீனிவாசன்பேசியதாவது:சாலை விபத்துக்களின் போது உயிருக்கு ஆபத்தான முறையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்தை கோல்டன் ஹவர் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அந்த ஒரு மணி நேரத்தில் அவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டால் சாலை விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறையும் முடியும் என்கிறார்கள். விபத்துக்குள்ளானவர் படுங்காயங்களால் பாதிக்கப்பட்டாலோ அல்லது நினைவிழந்த நிலையில் இருந்தாலும் உதவும் எண்ணம் உள்ளவர்கள் எண்ணிக்கை இன்று குறைவாகவே உள்ளது. காரணம் உதவியவர்கள்மருத்துவமனையில் சிகிச்சைக்குபணம்அளிக்கவேண்டும் அல்லது காவல்துறையினரின் விசாரணைக்குசெல்லவேண்டியிருக்கும் என்ற பயம் பலருக்கு உள்ளது. இந்த காரணங்களால் பலரும் விபத்துகளில் உதவ மனம் இருந்தும் பாதிக்கப்பட்டவர்களை கண்டும் காணாமல் சென்று விடுகிறார்கள். உதவும் எண்ணம் உள்ளவர்களை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதே இந்த சட்டத்தின் நோக்கமாகும்.
இந்த சட்டம் 2014 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி நீங்கள் உங்கள் வழியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு அசம்பாவித சம்பவங்களை கண்ணெதிரே காண நேர்ந்தால் கொலை, கொள்ளை ,கடத்தல் பாலியல் வன்முறை, விபத்து எதுவாக இருந்தாலும் உடனடியாக அவசர எண் 100 யை அழைத்து அவருக்கு முதலுதவி செய்பவர்கள் “குட்சமரிடன்”எனஅழைக்கப்படுவர் இவ்வெகுமதியை உங்களுக்கு நான்வழங்குவதில்பெருமைப்படுகிறேன் எனக் கூறினார். இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்கள் சுந்தரமூர்த்தி மற்றும் திருமேனி மாவட்ட காவல்துறைதுணை கண்காணிப்பாளர் கண்ணன், நகர போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்