அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் கூட்டுறவு துறை களப்பணியாளராக பணியாற்றும் பழனிசாமி என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து
இன்று முதல் சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று தினங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வருவதற்குதடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்துமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் நகராட்சி ஆணையர் குமரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் குழு கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும்பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்அரியலூர் – பத்திர பதிவு துறை அலுவலக – பெண் சார் பதிவாளருக்கும் நோய் தொற்று உறுதியானதால் பல்துறை அலுவலகவளாகத்தில் இயங்கிவரும், மாவட்டபத்திர பதிவாளர் அலுவலகமும் மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது.
இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் மூலம் மாவட்ட பத்திரப் பதிவாளர் அலுவலகம்முழுவதும் கிருமிநாசினிதெளிக்கும்பணிமேற்கொள்ளப்பட்டுவருகிறது.