
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.ஆர். ஸ்ரீனிவாசன் மாவட்டத்தில் சிறப்பாகபணிபுரிந்தகாவல்துறையினருக்குபாராட்டுசான்றிதழ்களை வழங்கினார்
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் காவல் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் சிறப்பாக பணிபுரிந்த 9 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் மாவட்ட காவல் துறை அலுவலக வளாகத்தில்வழங்கி சிறப்பித்தார். உடன் கூடுதல் காவல்கண்காணிப்பாளர்திருமேனிமற்றும் சுந்தர மூர்த்தி , துணை காவல்கண்காணிப்பாளர்கண்ணன் ,அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமேணிமற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் ஆழ்துளை கிணறுகளை மூடியதற்காக ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் முகமது இத்ரீஸ், குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தற்காக அரியலூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் செந்தில்மாறன் , குற்றவாளிகளை சிறையில்அடைக்கஉறுதுணையாக இருந்த அரியலூர்காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் உதயகுமார் மற்றும் திரு. நந்தகுமார் , மரம் நடுதல் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்ட அரியலூர் உட்கோட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் , வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அளித்த கயரலாபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் நெப்போலியன் மற்றும் ஊர்க்காவல் படை வட்டார தளபதி ஜீவானந்தம் , மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில்அடைக்கஉறுதுணையாக இருந்துசெயல்பட்டஇரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சிறப்பு காவல் உதவிஆய்வாளர்ரமேஷ்,உள்ளிட்டோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மாவட்டகாவல்துறைகண்காணிப்பாளர் வீ .ஆர் ஸ்ரீனிவாசன் வழங்கி பாராட்டினார்.