Home இந்தியா ஒடிசா அருகே விபத்தில் பலியான ராணுவ வீரர் உடல் தேனி மாவட்ட சின்னமனூர் அருகே இன்று அடக்கம்..

ஒடிசா அருகே விபத்தில் பலியான ராணுவ வீரர் உடல் தேனி மாவட்ட சின்னமனூர் அருகே இன்று அடக்கம்..

0
ஒடிசா அருகே விபத்தில் பலியான ராணுவ வீரர் உடல் தேனி மாவட்ட சின்னமனூர் அருகே  இன்று அடக்கம்..

ஒடிசா அருகே விபத்தில் பலியான சின்னமனூர் ராணுவ வீரர் உடல் இன்று அடக்கம். ஜூலை 11:- தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியில் உள்ள துரைசாமி புரத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் அழகுராஜா (40) இவர் இந்திய ராணுவத்தில் 15 ஆண்டுகளாக ராணுவ வீரராக பணியாற்றி வந்தார்.கடந்த 3 ஆண்டுகளாக ஒடிசாவில் பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் போருக்கு பயன்படுத்தப்படும் ராணுவ தளவாடங்களை ஒரு ராணுவ வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அழகுராஜா, நாயக்க கிருஷ்ணா ரெட்டி, சுபாஷ் ரெஈட்டி ஆகியோர் லடாக்கிற்கு சென்று கொண்டிருந்தனர். ராஞ்சி பட்னா போர் லோன் மலைப்பாதையில் சுட்டு பாலு பள்ளத்தாக்கு அருகே சென்றபோது திடீரென பிரேக் பிடிக்க வில்லை. இதனால் நாயக் கிருஷ்ணா ரெட்டி,சுபாஸ் ரெட்டி ஆகியோர் கீழே குதித்து உயிர் தப்பினர். முன்னால் இரும்பு குழாய்களை ஏற்றிச் சென்ற இன்னொரு ராணுவ வாகனத்தில் அழகுராஜா சென்ற வாகனம் மோதியது.இதில் அழகுராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த ராம்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி அழகு ராஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு உடற்கூறு பரிசோதனைக்கு பின் அழகுராஜா உடல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது ராணுவ வாகனத்தில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்த நாயக் கிருஷ்ணா ரெட்டி, சுபாஷ் ரெட்டி ஆகியோர் ஒடிசா ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அழகுராஜா உடல் விமானம் மூலம் நேற்று கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது இன்று ஜூலை 11 அழகு ராஜா உடல் ராணுவ மரியாதையுடன் குச்சனூர் துரைசாமிபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. விபத்தில் உயிரிழந்த அழகு ராஜாவிற்கு ராணி என்ற மனைவியும் ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். ராணுவ வீரர் விபத்தில் இறந்த செய்தியால் துரைசாமிபுரம் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பெரியகுளம் செய்திகளுக்காக எஸ் கார்த்திகேயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here