தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

585

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை சென்னை உள்ளிட்ட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில்  தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பெரிய கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. சிறிய வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

ஆயினும் இம்மாதம் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்தபடி நாளை கடைகள் யாவும் அடைக்கப்பட உள்ளன. காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் நாளை கிடைக்காது. பால், மருந்துக் கடைகள்.மருத்துவமனை போன்றவற்றுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here