தரங்கம்பாடியில் காவல் ஆய்வாளரை தாக்கிய 20 மீனவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு

810

மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் காவல் ஆய்வாளரை தாக்கிய 20 மீனவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்கு மடி வலையை பயன்படுத்தும் கிராமங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 22 கிராம மீனவர்கள் போராட்டம் நடத்தியபோது சுருக்குமடி வலைக்கு ஆதரவாக நண்டலாறு சோதனை சாவடி அருகே போராட்டம் நடத்திய சந்திரபாடி மீனவர்களை தாக்குவதற்காக ஆயுதங்களுடன் சென்ற கும்பலை தடுத்த பொறையார் காவல் ஆய்வாளரை தாக்கி மண்டையை உடைத்த மீனவர்கள் மீது வழக்கு பதிவு. பொறையார் காவல் ஆய்வாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில் 147,148,294(b),353, 332 506(ii)ஆகிய பிரிவுகளில் 20 நபர்கள் மீது பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது மயிலாடுதுறை செய்தியாளர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here