560

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 14 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்ய முயன்ற 42 வயதுடைய நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அணவயல் எல் என் புரம் கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்துள்ள 14 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் கட்டாய திருமணம் செய்யவுள்ளதாக வடகாடு காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற வடகாடு காவல் நிலைய ஆய்வாளர் பரத் ஸ்ரீநிவாஸ் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று
கட்டாய திருமணம் செய்ய முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பாஸ்கர் என்ற நபரை கைது செய்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் சிறுமியை கட்டாய திருமணம் செய்ய முயன்ற குற்றவாளி பாஸ்கர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பத்தாம் வகுப்பு படித்த 14 வயது சிறுமியை 42 வயதுடைய நபர் ஒருவர் கட்டாய திருமணம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here