
ஆலங்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது
தடை செய்யப்பட்ட நல்ல நேரம் என்ற வெளி மாநில லாட்டரிச் சீட்டு விற்ற வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி (பொ) ஆலங்குடி திருவள்ளுவர் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா குரு விக்கரம்பை மதியழகன் மகன் ஆனந்தன் (23) அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே தடை செய்யப்பட்ட நல்ல நேரம் என்ற லாட்டரிச் சீட்டை விற்று கொண்டிருந்தார்.
இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி ஆனந்தனைப் பிடித்து விசாரித்த போது லாட்டரிச் சீட்டு விற்றதை ஒத்துக் கொண்டார். அவரிடமிருந்து ரூ 330 மதிப்புள்ள 11 லாட்டரி சீட்டுகளைப் பறிமுதல் செய்த போலீசார் அவர்மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.