சென்னை அண்ணாசாலையில் போலி கால் சென்டர் நடத்திய விவகாரத்தில் தொடர்புடைய, மேலும் 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

356

சென்னை அண்ணாசாலையில் போலி கால் சென்டர் நடத்திய விவகாரத்தில் தொடர்புடைய, மேலும் 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
 
போலி கால் செண்டர் நடத்தி வங்கி மோசடியில் ஈடுபட்டதாக பென்ஸ் கிளப் உரிமையாளர் பென்ஸ் சரவணன் மற்றும் செல்வகுமார் ஆகியோரை, கடந்த மார்ச் மாதம் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் பெருங்குடி மற்றும் திருவான்மியூரில், போலி கால்செண்டர் நடத்தி வந்த அவர்களது கூட்டாளிகள் மூவர் இருதினங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டனர்.
இதன் நீட்சியாக முக்கிய குற்றவாளியான செல்வகுமாருக்கு உதவியாக இருந்த, சென்னையைச் சேர்ந்த ஜாவித், முகமது ஜாகீர்கான், கோகுலகிருஷ்ணன், ராஜ்குமார் ஆகியோரை, நேற்று கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here